மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.25% சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்து 80,082 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 368 புள்ளிகள் சரிந்து 24,180 புள்ளிகளாக உள்ளது. உலோக நிறுவனங்கள், ஐடி துறை, வங்கித்துறை உள்பட அனைத்து துறைகளின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பதாலும் சீன பொருளாதாரத்தில் மீட்சி தாமதம் காரணமாக பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
The post சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி appeared first on Dinakaran.