மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விருதுநகர், டிச.13: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் தொடர் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது.

நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு மி.மீ வருமாறு: திருச்சுழி 5.20, ராஜபாளையம் 2, காரியாபட்டி 2.40, ஸ்ரீவில்லிபுத்தூர் 15, விருதுநகர் 4, சாத்தூர் 6, சிவகாசி 3, பிளவக்கல் 4.80, வத்திராயிருப்பு 3, கோவிலாங்குளம் 5.10, வெம்பக்கோட்டை 3.80, அருப்புக்கோட்டை 2.20 மி.மீ மழை பதிவாகியது.

நேற்று காலை 9 மணி முதல் மீண்டும் சாரல் மழை விட்டு, விட்டு மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பெய்தது. இதனால் கூலி தொழிலாளிகள் வேலையின்றி தவித்தனர். பள்ளி சென்ற மாணவ, மாணவியர் வீடுகளுக்கு திரும்பி வருவதற்கும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமலும் சிரமப்பட்டனர். வானம் மேமூட்டத்துடன் இருள் சூழ்ந்த நிலையில் விட்டு, விட்டு பெய்த தொடர் சாரல் மழையாலும், குளிர்ந்த காற்றினாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: