×

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக இறுதிச் சுற்றில் நுழைவது யார்? பரோடா-மும்பை, டெல்லி-மபி மோதல்

பெங்களூர்: உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரை இறுதிப் போட்டிகள் இன்று நடக்கின்றன. மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. அதில் மத்தியப் பிரதேசம், பரோடா, மும்பை, டெல்லி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி ஆட்டங்கள் இன்று பெங்களூர் சின்னசாமி அரங்கில் நடைபெற உள்ளன.  முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்கள் பரோடா – மும்பை அணிகள் களம் காண உள்ளன.

இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பரோடா, 5 முறை பைனலில் விளையாடி இருக்கிறது. மும்பை ஒரு முறை மட்டுமே பைனலில் விளையாடியது. இந்த இரு அணிகளும் முஷ்டாக் அலி தொடர்களில் 13 முறை மோதியதில் மும்பை 7 முறையும், பரோடா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை பைனலில் விளையாடி பஞ்சாப்பிடம் கோப்பையை பறிகொடுத்த க்ருணால் பாண்டியா தலைமையிலான பரோடா இந்த முறையும் தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேற முனைப்புக் காட்டும்.

தொடர்ந்து நடைபெறும் 2வது அரையிறுதியில் டெல்லி – மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன. முஷ்டாக் அலி தொடரில் இந்த அணிகள் ஏற்கனவே மோதிய 2 ஆட்டங்களிலும் டெல்லி அணிதான் வெற்றி பெற்றுள்ளது. எனினும் டெல்லி இதுவரை பைனலுக்கு முன்னேறியதில்லை. அதனால் கிடைத்த தோல்விகளுக்கு பதிலடி தரும் வகையில் டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாட ம.பி இன்று அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக இறுதிச் சுற்றில் நுழைவது யார்? பரோடா-மும்பை, டெல்லி-மபி மோதல் appeared first on Dinakaran.

Tags : Syed Mushtaq Ali Trophy ,Baroda ,Mumbai ,Delhi ,Mabi ,Bangalore ,T20 ,Madhya Pradesh ,Syed Mushtaq Ali ,Dinakaran ,
× RELATED ம.பி., பரோடா, மும்பை, டெல்லி அசத்தல் வெற்றி: உறுதி ஆனது அரையிறுதி