பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான போட்டிகளில் மோதி வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இதையடுத்து 14ம் தேதி நடக்கும் 3வது போட்டிக்காக, இந்திய அணி பிரிஸ்பேன் புறப்பட்டு சென்றது.
இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து விமான நிலையம் செல்ல காத்திருந்த பஸ்சில் ஏற, நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்த நேரத்தில் வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்த பஸ், விமான நிலையம் புறப்பட்டு சென்றது. தாமதமாக வந்து பார்த்த ஜெய்ஸ்வால் பஸ் இல்லாததை கண்டு அதிர்ந்தார். இருப்பினும், அவருக்கென வேறு கார் ஏற்பாடு செய்யப்பட்டதால் அதில் ஏறி விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.
The post பஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால் appeared first on Dinakaran.