×

விஜய் தேவரகொண்டா படத்தில் அனிருத்

ஐதராபாத்: தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஜெர்ஸி’ பட இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான எமோஷனல் படமான ‘ஜெர்ஸி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை கௌதம் தின்னூரி இயக்கியிருந்தார். அவர் அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப்படத்திற்கான அறிவிப்பு விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளையொட்டி வெளியானது. இந்தப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் படத்தை சிதாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதனிடையே காஷ்மீரில் படமாக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post விஜய் தேவரகொண்டா படத்தில் அனிருத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anirudh ,Vijay Devarakonda ,Hyderabad ,Gautham Thinnoori ,Nani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!