×

சென்னை மற்றும் புறநகரில் விட்டு விட்டு கனமழை: ராயபுரம், தங்கச்சாலை உள்ளிட்ட மேம்பாலத்தில் அணிவகுத்த வாகனங்கள்

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் ராயபுரம் மற்றும் தங்கச்சாலை மேம்பாலங்கள் மீது கார் மற்றும் வாகனங்களை பொதுமக்கள் நிறுத்தி வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை வரும்போதெல்லாம் மேம்பாலங்கள் பார்க்கிங் இடமாக மாறி வருகின்றன.

இந்நிலையில், கனமழை காரணமாக மக்கள் தங்கள் வாகனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வாகனங்களை மேம்பாலத்தின் மீது வணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக ராயபுரம், தங்கச்சாலை, தண்டையார்பேட்டை, வைத்திய நாதன் உள்ளிட்ட பாலங்களில் கார்கள், வேன்கள், மினி வேன்கள் போன்றவை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அதிக கனமழையின் போது பொதுமக்கள் தங்கள் வாகனங்களை தண்ணீரில் இருந்து பாதுகாப்பதற்காக மேம்பாலத்தில் நிறுத்தி வைப்பதற்கு கட்டணம் இல்லை என மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து கனமழை பெய்யும் போதெல்லாம் மக்கள் மேம்பாலங்களில் வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைக்கின்றனர்.

The post சென்னை மற்றும் புறநகரில் விட்டு விட்டு கனமழை: ராயபுரம், தங்கச்சாலை உள்ளிட்ட மேம்பாலத்தில் அணிவகுத்த வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rayapuram ,Thangachalai ,Thangachal ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளி முதல்வருக்கு எதிராக...