சென்னை: புதுடெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மற்றும் குடியியல் மருத்துவர்களுக்கு குறித்த நேரத்தில் ஊக்கத்தொகை வழங்காமல் நிர்வாகத்தினர் இழுத்தடித்து ஏமாற்றி வருகின்றனர்.
இப்புகார்களின்பேரில் தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய கருத்தெடுப்பில், 27 சதவீத முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. மேலும், தனியார் கல்லூரிகளில் 57 சதவீத மாணவர்களுக்கு, அரசு குறிப்பிட்டுள்ளதை விட குறைவான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற குறைகளை களைந்து, முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்பி குறிப்பிட்டுள்ளார்.
The post பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் தாமதம்: விஜய்வசந்த் எம்பி தீர்மானம் appeared first on Dinakaran.