* 1998 முதல் டெல்லியில் பா.ஜ ஆட்சியில் இல்லை. 1998ல் இருந்து 2015 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
* 2015ல் ஆம்ஆத்மி மொத்தம் உள்ள 70 தொகுதியில் 67 இடங்களையும், 2020ல் 62 இடங்களையும் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
புதுடெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அடிசி உள்ளார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிட்டது. அதன்படி டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதியில் ஆம்ஆத்மி 4, காங்கிரஸ் 3 தொகுதியில் போட்டியிட்டன. இதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சி இதுவரை மொத்தம் 31 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறுகையில்,’ டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும். எனவே காங்கிரஸ் கட்சியுடன் எந்த கூட்டணிக்கும் சாத்தியமில்லை’ என்றார்.
The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.