திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி மலை உச்சியின் மீது தீபம் ஏற்றும் நிகழ்வு எவ்விதத்திலும் தடைப்படக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் சரவணவேல் ராஜ் உத்தரவின்படி, பேராசிரியர் கே.பிரேமலதா தலைமையிலான 8 நபர்கள் கொண்ட குழுவினர் கடந்த டிசம்பர் 7,8,9 ஆகிய 3 நாட்கள் மலையில் களஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையின்படி 350 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் திரிகளையும், முதல்நாள் 40 டின்கள் மூலம் 600 கிலோ நெய்யும், பிற நாட்களில் தேவைக்கேற்ப தீபத்திற்கான நெய்யும் மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல தேவைப்படும் மனித சக்தி பயன்படுத்தப்படும். பக்தர்கள் மலையின் மீது ஏற அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தீப திருவிழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்றால்போல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் துணை முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நான், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் தலைமையில் 6 ஆய்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம். கார்த்திகை தீப நாளன்று திருவண்ணாமலை திருக்கோயிலில் பரணி தீபத்தைக் காண ஆன்லைனில் விண்ணப்பித்த 500 பக்தர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள், அரசு துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் என 6,500 நபர்களும், அதேபோல மாலையில் திருக்கோயில் வளாகத்தில் இருந்தபடியே மகா தீபத்தை காண முக்கிய பிரமுகர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்த பக்தர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள், அரசு துறை அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், காவல் துறையினர் என 11,600 நபர்களும் அனுமதிக்கப்படுவர். இந்த முறை சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post திருவண்ணாமலை தீபத்திருவிழா பரணி தீபம், மகா தீபத்தை காண பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.