×

வீறு நடைபோடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026 தேர்தலில் இந்தியா கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும்: செல்வப்பெருந்தகை டிவிட்

சென்னை: அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறு நடைபோடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி பெறும் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நம் மாநிலத்தின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1 சதவீதமாக அதாவது 23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது என சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது. இவை, தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தி வீறுநடைபோடும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனதார வாழ்த்துகிறேன், 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும்.

The post வீறு நடைபோடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026 தேர்தலில் இந்தியா கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும்: செல்வப்பெருந்தகை டிவிட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,India Alliance ,2026 elections ,Selvaperunthakai ,Dvt. ,CHENNAI ,Selvaperunthagai ,India ,2026 assembly elections ,Tamil Nadu Congress ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...