அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு ரூ.1240 உயர்வு: நகை வாங்குவோர் கலக்கம்

சென்னை: ஒரே நாளில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழலைப் பொறுத்து இந்தியாவின் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை தொட்டிருந்த தங்கம் விலை அதன் பின்னர் சற்றே குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலையானது படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,285க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் அதிரடியாக தங்கம் விலை அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.1240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை 2 நாளில் பவுனுக்கு ரூ.1240 உயர்வு: நகை வாங்குவோர் கலக்கம் appeared first on Dinakaran.

Related Stories: