அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு கைமாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு சதிச் செயல்கள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து தள்ளிவைக்க வேண்டுமென்று வாதிட்டார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் இதே காரணத்தை கூறி விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தனர். இதனையடுத்து, அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தது எப்படி? தனியாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.