- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- அண்ணாமலை
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- ஜனாதிபதி
- Kamalalaya
- பாஜா
- தியாகரயா, சென்னை
- தமிழ் அரசு
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் கைவினை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் 2021-22ம் நிதியாண்டு முடிவில் ரூ.21 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. 22 ஆயிரத்து 517 பஸ்கள் எண்ணிக்கை 2021-22 நிதியாண்டு முடிவுக்குள் 20 ஆயிரத்து 304 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, பஸ்கள் இயக்குவதற்காக மாற்றப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்குவதற்கு கூட பணம் இல்லை.
நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவன் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மத்திய தணிக்கை அமைப்புக்கு அதுகுறித்த விவரங்களை வழங்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இதற்காக, தமிழக அரசின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பாஜ தொடர உள்ளது. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். பாஜ சார்பாக நானும், ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும், ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை இது தொடர்பாக இன்று சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு தமிழக பாஜ கடிதம்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.