மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி ரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையில் இருந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரதியை நேற்று (10-ம் தேதி) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதனை கண்டித்து இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கபட்டது. அதனை தொடர்ந்து முழு அடைப்பின் போது அங்கு போராட்டமும், கல்லெறி சம்பவங்களும், அதனைத் தொடர்ந்து தீவைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரதி சேதப்படுத்தப்பட்ட தகவல் வெளியானதும், சுமார் 200 பேர் வரை அந்த இடத்தில் குவிந்துள்ளனர். சம்பவ இடத்தில் குவிந்த அவர்கள் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். மாலை 6 மணிக்கு ரயில் நிலையம் சென்ற அவர்கள், அங்கு இருந்த நந்திகிராம் விரைவு ரயிலின் ஓட்டுநரை தாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி, சுமார் 30 நிமிடங்கள் ரயில் பாதையை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மாலை 6.50-க்கு மேல் அந்தப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அதனைத் தொடர்ந்தே அரசியலமைப்பு பிரதியை சேதப்படுத்தியது தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
The post மகாராஷ்டிராவில் அம்பேத்கர் சிலை சேதம்: பர்பானி ரயில் நிலையம் அருகே வெடித்த வன்முறை..! appeared first on Dinakaran.