டெல்லி : தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதியைத் தராமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று மக்களவையில் தேசிய பேரிடர் திருத்த சட்டம் 2024 மீதான விவாதத்தில் காங். எம்.பி. சசிதரூர் பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாதிப்பு கடுமையாக உள்ளது எனத் தெரிந்தும் உதவவில்லை. தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் பாதிப்பு கடுமையாக உள்ளது எனத் தெரிந்தும் மத்திய அரசு உதவவில்லை: சசி தரூர் appeared first on Dinakaran.