மோசமானம் வானிலை.. மழையால் விமான சேவை பாதிப்பு: சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 7 விமானங்கள்!!

சென்னை: காற்று, மழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதன் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்தன. தோகா, மலேசியா, புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் வானில் வட்டமடித்தன. மேலும், டெல்லி, கோவை, புனே உள்ளிட்ட 9 பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

இதையடுத்து டெல்லி இருந்து 152 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. வானிலை சீரடைந்த பிறகு இண்டிகோ விமானம் சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி புறப்பட வேண்டிய விமானம் காலை 10.45 மணிக்கு பதிலாக பகல் 1 மணிக்கு மேல் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளூருவில் இருந்து சென்னை வர வேண்டிய விமானமும் மழை காரணமாக தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மோசமானம் வானிலை.. மழையால் விமான சேவை பாதிப்பு: சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 7 விமானங்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: