சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும்: பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என பிரதீப் ஜான் கணித்துள்ளார். தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நன்கு அமைந்த இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்; விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழையும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் திட்டமிருந்தால் 3 நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும்: பிரதீப் ஜான் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: