×

ஒன்றிய அரசை கண்டித்து மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், டிச. 11: தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக, மின் விநியோக கம்பெனிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து போராடி வரும் சண்டிகர் மற்றும் உத்திர பிரதேச மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவாக, மக்களுக்கான சேவை தொடர்ந்திட மின்சார வாரியங்களை பொதுத் துறையாக பாதுகாத்திட வலியுறுத்தி பெரம்பலூர் 4ரோடு அருகேயுள்ள மேற் பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கம் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின், AESU தொழிற்சங்கத்தின் சார்பாக திருச்சி மண்டலச் செயலாளர் பெரியசாமி, ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷன் சார்பாக ராமகிருஷ்ணன், எம்பிளாய்யிஸ் ஃபெடரேஷன் சார்பாக கணி, பொறியாளர் கழகம் சார்பாக மேகலா, பரமேஸ்வரி, அருள்ஜோதி, வட்டச்செயலாளர் வெங்கடேஷ், பொறியாளர் சங்கத்தின் சார்பாக வட்டசெயலாளர் ருத்ராபதி, ராஜேந்திரன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் சார்பாக வட்டச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Perambalur ,Joint Action Committee of Tamil Nadu Electricity Board Unions ,Chandigarh ,Uttar Pradesh Electricity Board ,
× RELATED பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு...