அஸ்வினி நட்சத்திர விருட்சம்: எட்டி மரம்.
அஸ்வினி நட்சத்திர யோனி: ஆண்குதிரை
அஸ்தினி நட்சத்திர பட்சி : இராஜாளி
அஸ்வினி நட்சத்திர மலர்: செவ்வல்லி
அஸ்வினி நட்சத்திர சின்னம்: அடுப்பு
அஸ்வினி நட்சத்திர தேவதை: சரஸ்வதி
அஸ்வினி நட்சத்திர கிரக தேவதை: கேது
அஸ்வினி பிறந்த கணம்: தேவகணம்
அஸ்வினி குமாரர்கள்…
அஸ்வினி குமாரர்கள் சூரியனுக்கும்-சரண்யு தம்பதிக்கும் பிறந்தவர்கள் என்று வேதம் சொல்கிறது. குதிரைமுகம் கொண்ட இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள். இவர்களில் ஒருவர் பெயர் நாசத்ய, மற்றொருவர் பெயர் தஸ்ரா. உலகிற்கு வெளிச்சம் தரக்கூடியவர். சூரிய பகவானுக்கு ஒரு முறை வலிமையற்று இருந்த பொழுது இந்த அஸ்வினி குமாரர்கள் தங்களின் முழு சக்தியை சூரியபகவானுக்கு வழங்கினார்கள். அதன் காரணமாக என்னவோ அஸ்வினி நட்சத்திரத்தில் சூரியன் முழுபலத்தையும் வழங்குகிறார். சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவானிடம் இருந்து பிரம்ம தேவர் ஆயுர் வேத முறைகளை கற்றுக்கொண்டார். பிரம்ம தேவர் அந்த மருத்துவ முறைகளை தட்சபிரஜாபதிக்கு கற்றுக் கொடுத்தார். தட்சபிரஜாபதியிடம் இருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேதத்தை கற்றுக் கொண்டார்கள். இவர்களே தேவ மருத்துவர்களாக உள்ளனர்.பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரிக்கு பிறந்த குழந்தைகள் நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் பஞ்சபாண்டவர்கள் ஆவர். இவர்கள் அஸ்வினி குமாரர்களுக்குப் பிறந்தவர்களே. இவர்களில் ஒருவர் குதிரையை கையாளும் வல்லமையையும் மற்றொருவர் ஜோதிடம் கையாளும் திறமையையும் பெற்றிருப்பர். மேலும், ஜோதிடம் கற்பவர்களுக்கு கேது வலிமையாக இருந்தால் நற்பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிட சூட்சுமம் ஆகும்.அஸ்வினி கேதுவின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாக உள்ளது.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குணங்கள்
இவர்கள் செய்யும் காரியங்கள் எதையும் துல்லியமாகச் செய்து முடிப்பர். மனஉறுதி கொண்டவர்களாக இருப்பர். லட்சியத்தை வெல்வதற்காக தொடர்ந்து பயணத்தை நோக்கி விரைந்து கொண்டே இருப்பார். இவர்கள் நேர்மையாக நல்லது செய்வதால் மற்றவர்களை பகைத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். முக்கியமாக உறவினர்களை பகைத்துக்கொள்வர்.செல்வந்தர், புத்திசாலிகளாக இருப்பார்கள். விவாதம் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஆடம்பரத்தை விரும்பக்கூடியவர்கள். பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
அஸ்வினி நட்சத்திரத்தின் வடிவங்களாவன
தலைப்பாகை, அன்னாசிப்பழம், அறுகம்புல், சூரிய உதயம், தலைமுடி, மொட்டை அடித்தல், அஸ்வினி நட்சத்திரத்திற்கான வேதை நட்சத்திரம் இந்த நட்சத்திரத்திற்கு வேதை தரக்கூடிய நட்சத்திரம் கேட்டை ஆகும். கேட்டை நட்சத்திரம் வரக்கூடிய நாட்களிலும் கேட்டை உள்ள நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதியாகும்.
அஸ்வினி நட்சத்திர பரிகாரம்
அஸ்வினி 1 மற்றும் அஸ்வினி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுப்ரமணியரையும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடுவதால் நன்மைகள் ஏற்படும். வெற்றியும் நன்மைகளும் உண்டாகும்.
அஸ்வினி 3 மற்றும் அஸ்வினி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் நாக சுப்ரமணியரை செவ்வாய் அல்லது சனிக்கிழமை ராகுகாலத்தில் வழிபடுவதால் வெற்றியும் அதிக நன்மையும் ஏற்படும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
எட்டிமரம் கன்றுகளை வாங்கி வயல்வெளி ஓரங்களில் நடுவதும் தானமாக தருவதும் பயனளிக்கும்.வேதம் படிக்கும் நபர்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கினால் வேதத்தை நன்கு கற்றுத் தெளிவார்கள். வேத விற்பனர்கள் ஆவார்கள். வேதா எனும் திருநாமம் இந்த கேதுவே கொடுக்கிறது. விநாயகர் வழிபாடு இவர்களுக்கு சிறப்புற்று விளங்கும். குறிப்பாக சனி பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கு அதிக தொல்லை கொடுப்பதில்லை என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
The post அஸ்வினி நட்சத்திரம் appeared first on Dinakaran.