சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரபடி தங்கத்தின் விலையானது தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் முதல் அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ56,720க்கும், 3ம் தேதி சவரன் ரூ57,040, 4ம் தேதி சவரன் ரூ57,040, 5ம் தேதி ரூ57,120, 6ம் தேதி ரூ56,920, 7 ம் தேதி என்று விற்பனையானது நேற்று ஒரு கிராம் ரூ.7130-க்கும் சவரன் ரூ.57040-க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7205-க்கும் -சவரன் ரூ.57640-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்
வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.104 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்ம், ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து, ரூ.5,950க்கும், ஒரு சவரன் ரூ. 47,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57640-க்கு விற்பனை appeared first on Dinakaran.