25 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பில் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது: DPIIT விளக்கம்

மும்பை: இந்தியாவிற்கு 25 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பில் அந்நிய நேரடி முதலீடு கிடைத்திருப்பதாக சர்வதேச வர்த்தக மற்றும் தொழிற்துறைகான ஊக்குவிப்புதுறை தெரிவித்துள்ளது. 2000 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்த தொகை அந்நிய நேரடி முதலீடாக கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக கருதுகின்றனர். இந்த நிலையில் மொரீஷியஸ் வழியாக 25 சதவீத அந்நிய நேரடி முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. அடுத்ததாக சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

The post 25 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பில் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது: DPIIT விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: