காமிக்ஸ் சாகச ஹாலிவுட் படம் தமிழில் வெளியாகிறது

சென்னை: ஆஸ்டெரிக்ஸ் மற்றும் ஓபேலிக்ஸ் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், விறுவிறுப்பான சாகசங்கள் நிரம்பிய ‘ஆஸ்டெரிக்ஸ் அண்ட் ஓபேலிக்ஸ்: தி மிடில் கிங்டம்’ எனும் ஐந்தாவது படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் முழுமையாக எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவையும் ஆக்‌ஷனும் கலந்து குடும்பத்தோடு பார்த்து மகிழ ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். பிலிப் மெக்கலன், ஜூலியன் ஹெர்வ் கதை எழுதியுள்ளனர். ஆஸ்டெரிக்ஸ் ஆக நடித்து படத்தை இயக்கியும் உள்ளார் கில்லாவும் கெனட். ஓபேலிக்ஸ் வேடத்தில் கில்லெஸ் லெல்லவ்ச் நடித்திருக்கிறார். படம் தமிழிலும் நாளை திரைக்கு வருகிறது.

The post காமிக்ஸ் சாகச ஹாலிவுட் படம் தமிழில் வெளியாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: