பாஸ்டெர்ரே: வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 74, தன்சித் ஹசன் 60, மகமதுல்லா நாட் அவுட்டாக 44, ஜாக்கர் அலி 48 ரன் அடித்தனர். வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட் எடுத்தார்.
பின்னர் 295 ரன் இலக்கை துரத்திய வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 9, எவின் லூயிஸ் 16, கீசி கார்டி 21 ரன்னில் வெளியேற கேப்டன் ஷாய் ஹோப் 86, ஷெர்பேன் ருதர்போர்ட் 80 பந்தில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் 113 ரன் விளாசினர். 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 295 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜஸ்டின் க்ரீவ்ஸ் நாட்அவுட்டாக 41 ரன் எடுத்தார். ஷெர்பேன் ருதர்போர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை நடக்கிறது.
The post வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: ஷெர்பேன் ருதர்போர்ட் சதம்.! வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.