×

ஆர்ஜே. பாலாஜியுடன் நடித்தார் லோகேஷ் கனகராஜ்

சென்னை: ஆர்ஜே. பாலாஜி படத்தில் சிறு வேடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இது காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர் ஒரு ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டார். இது குறித்த புகைப்படத்தை ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

The post ஆர்ஜே. பாலாஜியுடன் நடித்தார் லோகேஷ் கனகராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : RJ ,Lokesh Kanagaraj ,Chennai ,RJ Balaji ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லோகேஷ் கனகராஜ் துவங்கி வைத்த அருண் விஜய்யின் 36வது படம்!