வேலூர், டிச.9: வேலூர் பாலாற்றில் நண்பர்களுடன் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலியானான். வேலூர் முத்துமண்டபம் டோபிகானா குடியிருப்பை சேர்ந்தவர் கோபி, கூலித்தொழிலாளி. இவரது மகன் அஸ்வின்(8). நேற்று காலை தனது குடியிருப்பை சேர்ந்த நண்பர்கள் 2 பேருடன் குடியிருப்பின் பின்புறம் உள்ள ஆற்றில் ஓடிய ஓடைநீரில் குளித்துள்ளார். இந்நிலையில் 2 சிறுவர்கள் கரையேறிய பின்னர், நீண்ட நேரமாகியும் அஸ்வின் மேலே வரவில்லை. சிறுவன் நீரில் மூழ்கியதை அறிந்த மற்ற 2 சிறுவர்களும் ஓடிச்சென்று அஸ்வினின் பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று அஸ்வினை தேட தொடங்கினர். மேலும் வேலூர் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
The post நண்பர்களுடன் குளித்தபோது வேலூர் பாலாற்றில் மூழ்கி சிறுவன் பலி appeared first on Dinakaran.