இந்தியா – ஆஸி இடையே மேலும் 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. 3வது டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் வரும் 14ம் தேதி துவங்கி 18ம் தேதி முடிகிறது. 2வது டெஸ்டில் தோல்வி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், வரும் 2025 ஜூனில், லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும்.
இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் இந்தியா இடம் பெற வேண்டுமானால், ஆஸியுடனான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் வென்றாக வேண்டும். தவிர, பட்டியலில் இந்தியாவுக்கு மேலேயும் அடுத்தும் உள்ள அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும்.
The post கண்ணெதிரே கை நழுவும் வாய்ப்பு appeared first on Dinakaran.