×

போட்டி தேர்விற்கான மாதிரிதேர்வு மாவட்ட நூலகத்தில் நாளை நடக்கிறது

 

திருச்சி, டிச.8: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் ii-A, குரூப்-IV போட்டி தேர்விற்கான மாதிரி தேர்வு டிச.9ம் தேதி மாவட்ட மைய நுாலகத்தில் நடைபெற உள்ளது.திருச்சி மாவட்ட மைய நூலகம், என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் ii-A, குரூப்- IV போட்டித் தேர்விற்கான மாதிரிதேர்வு டிச.9ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 முதல் 1.30 வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

குரூப்- IV க்கான மாதிரி தேர்வில் 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் (இந்தியா, தமிழ்நாடு முக்கியத்துவம்) டிச.2024 நடப்பு நிகழ்வுகள், கணிதத்தில் பரப்பளவு ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம் பெறும். இத்தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாதிரி தேர்வு காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும். மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி ii-A. குரூப்-4 தேர்விற்கு தயார் செய்யும் மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post போட்டி தேர்விற்கான மாதிரிதேர்வு மாவட்ட நூலகத்தில் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Trichy ,District Central Library ,District Central ,Library ,N.R.I.A.S. Academy ,Rotary Phoenix ,Dinakaran ,
× RELATED திருவள்ளுவருக்கு மரியாதை