₹8.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

இடைப்பாடி, டிச.8: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. கோவை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 375 பருத்தி மூட்டை ஏலம் போனது. பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,200 முதல் ₹7709 வரையும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,619 முதல் ₹4,639 வரையும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக ₹8.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹8.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: