×

காரமடை அருகே பாகற்காய் கொடிக்கு இடையே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

 

காரமடை, டிச.8: காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு மூணுகுட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகனுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்ஐ சுரேந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது, மூணு குட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன் (45) என்பவரது விவசாய நிலத்தில் பாகற்காய் கொடி காட்டிற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள இரு கஞ்சா செடிகள், 3 அடி நீளமுள்ள ஒரு கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கணேசனை காரமடை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.தொடர்ந்து அவரிடம் இருந்து சுமார் 3 கிலோ எடையுள்ள 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காரமடை அருகே பாகற்காய் கொடிக்கு இடையே கஞ்சா செடி வளர்த்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Police Inspector ,Gnanasegan ,Velliyankadu Moonuguttai ,SI Surendran ,
× RELATED மனித-வனஉயிரின மோதலை தடுக்க புதிய...