×

திருச்சியில் மாணவனை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி, டிச.7: திருச்சியில் மாணவனை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி வரகனேரி பிச்சை நகரை சேர்ந்தவர் கமலா(45). இவரது 12ம் வகுப்பு படிக்கும் மகன் கடந்த 4ம் தேதி சங்கிலியாண்டபுரத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சிலர் மாணவனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதுகுறித்து மாணவனின் தாய் கமலா அளித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து காஜாப்பேட்டை மேலகிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த தினேஷ்(24), பிரகாஷ்ராஜ்(23) ஆகியோரை கைது செய்தனர்.

The post திருச்சியில் மாணவனை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Kamala ,Pichai ,Varaganeri ,Sangiyandapuram ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...