- கோவில் கும்பாபிஷேக விழா
- மணிகண்டம்
- கும்பபிஷேக் விழா
- பரிவரா
- முத்துமாரியம்மன்
- செல்வ விநாயகர்
- திருச்சந்தூர் முருகன்
- Alampatti
- மணிகண்டம், திருச்சி மாவட்டம்
- ஹோமா பூஜா
- Shivacharya
- சிவா பசுபதி
- கோயில் கும்பபிஷேகா திருவிழா
மணிகண்டம், டிச.7: திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன், செல்வவிநாயகர், திருச்செந்தூர் முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக ஹோம பூஜைகள் நடைபெற்றது. சிவ பசுபதி தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆலம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post மணிகண்டம் அருகே கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.