×

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்

இடைப்பாடி, டிச. 7: இடைப்பாடி அருகே உள்ள ஒக்கிலிபட்டியை சேர்ந்தவர் சம்பத்குமார்(32). இவரது மனைவி தமிழ்செல்வி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, தமிழ்செல்வி திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து தமிழ்செல்வியை மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண் appeared first on Dinakaran.

Tags : Interpadi ,Sampath Kumar ,Okilipatti ,Ehadpadi ,Tamilselvi ,
× RELATED குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்