×

டாஸ்மாக் சங்க ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, டிச. 7: சிவகங்கை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் தாழைமுத்து தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் காளைலிங்கம் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டியில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியருக்கு தமிழக அரசு ரூ.50லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மார்க் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் சகாயம், முன்னாள் மாநில குழு உறுப்பினர் குஞ்சரம்காசிநாதன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post டாஸ்மாக் சங்க ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tasmac Association ,Sivagangai ,Tamil Nadu ,AITUC TASMAC Employees Association ,TASMAC District ,TASMAC Sangh District ,Thalamuthu ,AITUC District ,President ,Kalalingam ,TASMAC ,Sangh ,
× RELATED சிவகங்கையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்