×

செங்கல்பட்டு 5வது வார்டு முதல் 10வது வார்டு வரை குழாயில் கலங்கலாக வரும் பாலாற்று நீர்: தொற்று நோய் பரவும் பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட நத்தம் பெரிநத்தம், அனுமந்த பொத்தெரி, மேட்டுத்தெரு, காத்தான் தெரு 33வார்டுகளிலும் பாலாற்று நீர் வழங்குவதற்கான குடிநீர் இணைப்பு செங்கல்பட்டு நகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சியில் குடிநீருக்கான வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் தினமும் வழங்கப்படாமல் 5 நாட்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் பாலாற்று தண்ணீரைசேமித்து வைத்து சிக்கனமாக செலவு செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது கடந்த 30ம்தேதி முதல் பெஞ்சல் புயலின் தாக்கத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வெளுத்து வாங்கியது. இந்நிலையில், கடந்த 1ம்தேதி முதல் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு முதல் 10வார்டுவரை உள்ள நகராட்சி குழாயில் இருந்து வரும் பாலாற்று குடிநீர் கடந்த 1ம்தேதியிலிருந்து கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் நுரைதள்ளியபடி குடிநீர் கலங்களாக வருகிறது.இதுவரை பாலாற்றுநீர் இதுபோன்று கலங்கலாக வந்ததில்லை. தற்போது இதுபோன்றுகுடிநீர் தட்டுப்பாடு கலங்கலாக வருவதால் அந்த நீரை எந்தவிதத்திலும் மக்கள் பயன்படுத்த முடியாமல் தண்ணீர் பிரச்னையால் பரிதவித்து வருகின்றனர்.

பாலாற்றில் தற்போது வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த தண்ணீர் அப்படியே குழாய் வழியாக வந்து சப்ளை செய்யப்படுகிறது.அந்த நீரை பயன்படுத்தினால் நோய்தொற்று ஏற்பட்டு உயிரழப்பு ஏற்ப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அந்த கலங்கல் நீரை பயன்படுத்த மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால் முறையற்ற பதிலளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தண்ணீர் பிரச்சினைக்கும் சுத்தமான குடிநீர்‌ வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு 5வது வார்டு முதல் 10வது வார்டு வரை குழாயில் கலங்கலாக வரும் பாலாற்று நீர்: தொற்று நோய் பரவும் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu 5th Ward ,10th Ward ,Chengalpattu ,Chengalpattu Municipality ,Nattam Perinattam ,Anumanda Botheri ,Mettutheru ,Khatan Street ,Dinakaran ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...