×

நீண்டகால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம்

திருச்சி, டிச.6: திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி திருச்சி மண்டலத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறுவணிகக் கடன், தொழிற் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணை சாராக் கடன்கள் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய இன ஆகியவற்றில் 31.12.2022 முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீர்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடனை தீர்வு செய்வதற்காக 12.09.2024 க்கு முன்பு 25% தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவர்களும் ஒப்பந்தம் மேற் கொண்டும். எஞ்சிய 75% தொகையை செலுத்தாதவர்களும் தற்போது மொத்த கடன் தொகையையும் நிலுவை தீர்வு செய்யும் நாள் வரை சாதாரண வட்டி ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களை தீர்வு செய்து கொள்ளாம். மேலும் இச்சிறப்புத் திட்டத்தின்கீழ் மேற்கூறிய கடன்கள் மட்டுமன்றி 31.12.2022 ல் முழுமையாக தவணை தவறி மூன்றாண்டுகளுக்கு மேலான (அதாவது 3122019க்கு முன் தவணை தவறிய மத்தியகால வேளாண் கடன்கள் பயிர்க்கடனாக வழங்கப்பட்டு, மத்தியகால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்டகடன்கள் பண்ணை சார்ந்த நீண்டகால கடன்கள் சிறுதொழில் கடன்கள் (SSI) மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கடன்கள் ஆகிய கடன்களையும் தீர்வு செய்யும் நான் வரையில் 9% சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை 12.03.2025க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம். தவணை தவறிய அக்கடன்களுக்கான கூடுதல் வட்டி அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

The post நீண்டகால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy District Central Co-operative Bank Primary Agricultural Co-operative Credit Societies ,Urban Co-operative ,Urban Co-operative Banks Primary Co-operative Agricultural ,Development Banks ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...