×

அரசு வன விரிவாக்க மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்; வன விரிவாக்க மைய அலுவலர் வழங்கினார்

சமயபுரம், டிச.6: சிறுகனூர் எம் ஆர் பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25ம் தேதி முதல் இம்மாதம் 5ம் தேதி வரை தலைமை வனப் பாதுகாவலர் சதிஷ் அறிவுரையின்படியும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ஆலோசனைபடியும்,வனவியல் விரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. வனச்சரக அலுவலர், கிருஷ்ணன் ரவி, மற்றும் வனவர் விக்னேஷ் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு நாற்றங்கால் செயல்முறைகளான தாய்ப்பாத்தி அமைத்தல், மண்கலவை தயார் செய்தல், மண் கலவையை பைகளில் நிரப்புதல், தாய்ப்பாத்தியில் முளைத்த விதை நாற்றுகளை பைகளுக்கு மாற்றுதல், நீர்பாய்ச்சுதல், களை எடுத்தல், தரம்பிரித்தல், பைகளை இடம்மாற்றுதல் தொடர்பான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் விதைமரம் தேர்வு செய்தல் (Plus Tree), விதைகளை சேகரம் செய்தல், விதை முளைப்பு திறன், விதை நேர்த்தி முறை, பல்வேறு வகையான மர விதைகளை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் சுயமாக நாற்றங்கால் உற்பத்தி செய்து மேம்படும் வகையில் நாற்றங்கால் தொழில்நுட்பம் குறித்து சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தொழிற்கல்வி ஆசிரியை (விவசாயம்) கல்பனா ,முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) ரமீலா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஒருங்கினைத்து வழிநடத்தினர் இப்பயிற்சியின் இறுதி நாளான இன்று பங்கு பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வன விரிவாக்க அலுவலர் சரவணகுமார் வழங்கினார். தொடர்ந்து தமிழக அரசின் இந்த முயற்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வன விரிவாக்க மையத்தில் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வன விரிவாக்க மையத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

The post அரசு வன விரிவாக்க மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்; வன விரிவாக்க மைய அலுவலர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Government Forest Extension Centre ,Forest Extension ,Samayapuram ,Sirukanur ,MR Palayam Forestry Extension Center ,Ayyampalayam Government Higher Secondary School, ,Vocational Agriculture Science Division ,Government Forestry Extension Center ,Forest Extension Center ,Dinakaran ,
× RELATED சமயபுரம் கோயிலில் உள்ள 500 கிலோ தங்கம்...