×

புஜங்கனூர் அரசு பள்ளியில் மாதிரி வினா – விடை தொகுப்பு விநியோகம்

காரமடை,டிச.5: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தினகரன் நாளிதழில் வினா-விடை தொகுப்பு வாரந்தோறும் திங்களன்று வெளியிடப்பட்டு வருகிறது.காரமடையை அடுத்துள்ள புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினரும்,முன்னாள் தலைவருமான (திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்) டி.சி.நடராஜன் தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி முன்னிலையில் வினா-விடை தொகுப்பு வழங்கப்பட்டது.

அப்போது,பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, உறுப்பினர்கள் புலவர் நஞ்சப்பன், ஜெயராம், செருளப்பன்,பட்டுலிங்கம்,வேலுச்சாமி, சுப்பிரமணி,டி.கே.துரைசாமி, வெள்ளியங்கிரி,தேவராஜ்,மேடூர் துரைசாமி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தெருநாய்களை கட்டுப்படுத்துங்க…!
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இந்த தெருநாய்கள் வார்டுகளிலும் புகுந்து நோயாளிகளை அச்சுறுத்தி வருகிறது. தனியாக செல்லும் நபர்கள், சிறுவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை தூரத்துகிறது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post புஜங்கனூர் அரசு பள்ளியில் மாதிரி வினா – விடை தொகுப்பு விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Bujanganur Government School ,Karamadai ,Dinakaran ,Pujanganur Govt. High School ,
× RELATED மனித-வனஉயிரின மோதலை தடுக்க புதிய...