×

கார் மோதி முதியவர் சாவு

சேலம், டிச.5: சேலம் கந்தம்பட்டி ஏழுமலைவட்டம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (65). இவர் கார்பெண்டராக ேவலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் முனுசாமி கந்தம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முனுசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனுசாமியின் மீது மோதிய காரின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கார் மோதி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Munusamy ,Salem Kandampatti Echumalaivattam ,Gandampatti ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...