- Thiruputhur
- தமிழ்நாடு மகளிர் பூப்பந்து அணி
- திருப்புத்தூர்
- தமிழ்நாடு மாநில பூப்பந்து கழகம்
- தென்காசி
- தமிழ்நாடு பூப்பந்து மகளிர் அணி
திருப்புத்தூர், டிச. 4: தென்காசியில் தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடந்த மாவட்டங்களுக்கு இடையான மகளிர் பூப்பந்தாட்ட போட்டியில் மாநிலப் போட்டிக்கு திருப்புத்தூர் மாணவி தேர்வாகியுள்ளார். தென்காசியில் தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் டிச.1ம் தேதி மாவட்டங்களுக்கு இடையே 69வது 19 வயதிற்குட்பட்ட இளைஞர் பூப்பந்தாட்ட பட்டைய விழா மற்றும் 70 வது சீனியர் மகளிர் பூப்பந்தாட்ட பட்டைய போட்டிகள் நடைபெற்றன.
இதில் சீனியர் மகளிர் அணியில் சிவகங்கை மாவட்டத்திற்காக சிறப்பாக விளையாடிய திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தம்பிபட்டியைச் சேர்ந்த மாணவி முத்தரசி (20) தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட மகளிர் அணிக்கு விளையாட தேர்வு பெற்றுள்ளார். மாநில போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ள மாணவி முத்தரசியை சிவகங்கை மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர். மாணவி முத்தரசி காரைக்குடி வள்ளல் பூ பந்தாட்ட கழகத்தை சேர்ந்தாவர். இவர் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.காம் 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.
The post தமிழ்நாடு பூப்பந்தாட்ட மகளிர் அணிக்கு திருப்புத்தூர் மாணவி தேர்வு appeared first on Dinakaran.