×

திருச்சி அடுத்த பூங்குடி ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் இயக்கப்படுவதில் மாற்றம்

திருச்சி, டிச.3: தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட மக்கள் தொடர்புத்துறை அலுவலர் வினோத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பூங்குடி ரயில்வே பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறியியல் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை – மயிலாடுதுரை விரைவு வண்டி (எண்.16848) செங்ககோட்டையில் இருந்து காலை 7.05மணிக்கு புறப்பட இருந்தது. இது 3,5 மற்றும் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் டிச.19, 20, 21, 23, 26, 27 மற்றும் 30ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் 2025ம் ஆண்டு ஜனவரி 3,6 மற்றும் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி சந்திப்பு வழியாக இயங்கும். கல்லிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை வழியில் இயங்காது.

கூடுதல் நிறுத்தங்கள் மானாமதுரை மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்கள் வழங்கப்படும். நாகர்கோயில் – மும்பை விரைவு ரயில் நாகர்கோயில் ரயில் நிலையத்தில் வரும் டிச.19ம் மற்றும் 26ம் தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக செல்லும். மதுரை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நிற்காது. கூடுதல் ரயில் நிலையங்கள் மானாமதுரையில் வழங்கப்படும். கன்னியாக்குமரி – ஹவுரா விரைவுரயில் வண்டி எண் 12666 டிச.21ம் தேதி காலை 5.50 புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி சந்திப்பு வழியாக இயங்கும். மதுரை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்கள் வழியாக இயங்காது. கூடுதல் ரயில் நிலையங்கள் மானாமதுரையில் வழங்கப்படும்.

குருவாயூர் – சென்னை என்னுார் விரைவு ரயில் டிச.20,25ம் தேதி மற்றும் 2025 ஜனவரி 2 மற்றும் 5ம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி சந்திப்பு வழியாக இயங்கும். மேலும் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை வழியில் இயங்காது. கூடுதல் ரயில் நிலையங்கள் மானாமதுரையில் வழங்கப்படும். மதுரை- பிகானர் விரை ரயில் வண்டி எண்.22631 டிச.26ம் தேதி காலை 11.55 மணிக்கு புறப்பட இருந்த ரயில் 2 மணிநேரம் 5 நிமிடம் தாமதமாக மதியம் 2 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி அடுத்த பூங்குடி ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் இயக்கப்படுவதில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Poongudi ,Trichy ,Southern Railway ,Division ,Public Relations Officer ,Vinod ,Senkottai ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு...