- OPS
- சென்னை
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- அண்ணாமலையார் மலை
- திருவண்ணாமலை
- பெஞ்சல் புயல்
- தின மலர்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது இரண்டு பாறைகள் வீட்டில் உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மண்சரிவில் பலியான7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: ஓபிஎஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.