இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு 45 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதில் 15 கோடி ரூபாய் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் ஏப்ரல் மாதம் மாநில முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் காரணமாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
The post டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரலில் மாநிலம் முழுவதும் அமல்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.