×

தமிழ்நாடு அணி மீண்டும் தோல்வி


இந்துார்: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று தமிழ்நாடு அணியை சவுராஷ்டிரா அணி, 58 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாஸ் வென்ற தமிழ்நாடு பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தனர். அந்த அணியின் ருசித் அஹிர் 56, சம்மார் குஜ்ஜார் 55, ஹர்விக் தேசாய் 55 ரன் குவித்தனர்.

பின் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 177 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 55 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வியை தழுவியது. தமிழ்நாடு அணிக்கு தொடர்ச்சியாக கிடைத்த 4வது தோல்வி இது.

The post தமிழ்நாடு அணி மீண்டும் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indore ,Saurashtra ,Syed Mushtaq Ali Trophy T20 cricket match ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...