×

சச்சின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் கோஹ்லி

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் இமாலய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார்.

அது ஆஸ்திரேலிய மண்ணில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக அவரது பத்தாவது சதமாக அமைந்தது. மேலும், அந்த சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்து கொண்டார்.

சச்சின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் 65 இன்னிங்ஸ்களில் 9 சதம் அடித்திருக்கிறார். விராட் கோஹ்லி தற்போது 44 இன்னிங்ஸ்களில் 9 சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த நிலையில், இந்தத் தொடரில் மீதம் உள்ள 4 போட்டிகளில் கோஹ்லி சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, 2வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ள அடிலெய்டு மைதானத்தில் கோஹ்லி நல்ல பேட்டிங் ரெக்கார்டு வைத்துள்ளார். அந்த மைதானத்தில் அவரது பேட்டிங் சராசரி 63 ஆக உள்ளது. எனவே, அவர் அந்த போட்டியில் சதம் அடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி கோஹ்லி சதம் அடித்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலா 8 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளனர். மைக்கேல் கிளார்க் 7 சதங்கள் அடித்து 3வது இடத்தில் உள்ளார்.

The post சச்சின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் கோஹ்லி appeared first on Dinakaran.

Tags : Kohli ,Sachin ,Adelaide ,Virat Kohli ,Dinakaran ,
× RELATED ஜாகீர் கானை போல் பந்து வீசும்...