கரூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகைமலையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. கிருஷ்ணராயபுரத்தில் 10 செ.மீ., பஞ்சப்பட்டி 9.5 செ.மீ., மாயனூர் 8.4 செ.மீ., பாலவிடுதியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகைமலையில் 13 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.