முதியோர் உதவி தொகை, 100 நாள் வேலை திட்டம் போன்ற சேவைகளை ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக வங்கி வணிக தொடர்பாளர்கள் மேற்கொண்டு வந்தனர். வங்கி வணிக தொடர்பாளர்கள் வங்கிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்தபோது, ஒரு முதியோர் ஓய்வூதிய தொகைக்கு ₹30 கமிஷன் வங்கிகளுக்கு தரப்பட்டது.
இதில், வங்கி கமிஷன் ₹6 ரூபாய் போக மீதமுள்ள ₹24-ஐ வணிக தொடர்பாளர்கள் பெற்று வந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் வங்கிகள் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதால், வணிக தொடர்பாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்களாக மாற்றப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகை ₹15ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு அரசு அளிக்காததன் காரணமாக, வங்கி வணிக தொடர்பாளர்களுக்கான கமிஷனை வங்கிகள் அளிக்கவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிலுவைத்தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
The post வங்கி வணிக தொடர்பாளர்களுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.