×

காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 ஏரிகள் நிரம்பி வழிகின்றன

 

காஞ்சிபுரம். டிச.2: தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடங்கிய மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் என பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.

இதில், 113 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி ஆகிய 10 ஏரிகளும்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளைபட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபுத்தூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி என செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஏரிகள் என மொத்தம் 113 ஏரிகள் நிரம்பியள்ளன .

இந்த நிலையில் மிகப்பெரிய ஏரிகளான விவசாயத்திற்கும் நீர் ஆதாரத்துக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய ஏரிகளின் நீர் முக்கிய ஏரிகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு விபரம் வருமாறு காஞ்சிபுரம் 153.24மிமி, உத்திரமேரூர்-205.20 வாலாஜாபாத்-127.00 ஸ்ரீபெரும்புதூர்-130.80 குன்றத்தூர்-107.20 செம்பரம்பாக்கம்-132.80 (நேற்று காலை 6:00 மணியிலிருந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி) என மழை பதிவாகியுள்ளது.

The post காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 ஏரிகள் நிரம்பி வழிகின்றன appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu district ,Cyclone ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Kanchipuram Thiruvallur Chengalpattu ,Kanchipuram – ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...