ஒடிசாவில் இருந்து கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

அண்ணாநகர்: வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் பெரம்பூர் வழியாக, சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அண்ணாநகர் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த ரயிலில் இருந்து, பார்சலுடன் கீழே இறங்கிய 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் பார்சலை போட்டுவிட்டு தப்ப முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து, பார்சலை சோதனை செய்தபோது, கஞ்சா இருப்பது தெரிந்தது.

விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வசுப் குப்தா (19), இவரது நண்பர் சோனு (19) என்பதும், சென்னையை சேர்ந்த சிலர் கஞ்சா கடத்தி வந்து கொடுத்தால், பணம் தருவதாக கூறியதாகவும், அதன்பேரில், இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்து, 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் கஞ்சா வாங்கி வரும்படி கூறிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

The post ஒடிசாவில் இருந்து கடத்திய 20 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: