- முதல் அமைச்சர்
- கொளத்தூர் மாவட்டம்
- சென்னை
- கே. ஸ்டாலின்
- ஸ்டாலின்
- கோலாத்தூர் சட்டமன்றத் தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- கொளத்தூர்
சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயல், மழை ஓய்ந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண பணிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார். கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட் அடித்தார். அப்போது கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை அரசு சிறப்பாக மேற்கொண்டதற்கு கொளத்தூர் பகுதி மக்கள், முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்தனர்.
அப்போது மழை தொடர்பாக இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மதிப்பதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை என்றார். பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து, மின்சாரத்துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் நிவாரண பணிகளை மேற்கொள்ள களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
The post சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகளை நேரில் செய்து நிவாரண பணிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.