புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் நிவாரண முகாமாக மாற்ற ஆட்சியர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் முகாமாக மாற்ற ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு அளித்துள்ளார். புதுச்சேரியில் 47 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. புதுச்சேரியில் பல இடங்களில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். புதுச்சேரியில் மீட்கப்படும் மக்களை பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். நிவாரண முகாம் அமைக்க வசதியாக அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் திறக்க வேண்டும். மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு அளித்துள்ளார்.

The post புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் நிவாரண முகாமாக மாற்ற ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: